வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 3 ஜூன், 2011

மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு ஒத்திவைப்பு

ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியான ஜோன்ஸ்டன் கொலின் வெலண்டைன் சிறைக்காவலர்களினால் மன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது அரச சட்டவாதி குமாரரட்ணம் ஆஜராகி இருந்த போதிலும், எதிரியின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி க. ஜெயக்குமார் மன்றிற்கு சமுகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணையினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
அடுத்தமாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் தொடர்ந்தும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது மகேஸ்வரன் எம்.பி. சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’