வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 ஜூன், 2011

பிரதீப் மாஸ்டர் விடுவிக்கப்பட்டார்

கி ழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஷ்ணாநந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) இன்று இரவு 9.30 மணியளவில் விடுவிக்கப்பட்டார் என கட்சியின் செயலாளர் நாயகம் கைலேஸ்வரராஜா தெரிவித்தார்.

கடந்த மாதம் 16ஆம் திகதி மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட பிரதீப் மாஸ்டர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்டு- மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் குற்றமற்றவர் என்ற ரீதியில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற கொலைகள் பற்றிய சந்தேகத்தின் பேரில் பிரதீப் மாஸ்டர் உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் கடந்தமாதம் குற்றமற்றவர்கள் என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் கைது தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலம் சோதனையிட முயற்சிக்கப்பட்டமை தொடர்பிலும் கடந்த மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதியுடன் த.ம.வி.பு. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதன்போது துரித விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் குற்றமற்றவர்களாயின் விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’