வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 16 ஜூன், 2011

'கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'

கி ழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள வலயங்களுக்குட்பட்ட ஆசிரிய இடமாற்றத்தினை எவரும் அரசியலாக்கி பார்க்க வேண்டாம். இது கிழக்கு மாகாணத்தின் கல்வி என்பதை நினைத்து பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடைநிறுத்தியுள்ளார் என பிரயமைச்சர் முரளிதரன் தெரிவித்ததாக இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த இடமாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடமோ அல்லது கிழக்கு மாகாண ஆளுனரிடமோ எதுவும் தெரிவிக்காமல் பிரதியமைச்சர் முரளிதரனிடம் கூறியிருக்க மாட்டார்.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் இடமாற்றம் திட்ட மிட்ட படி இடம்பெறும். அதை தடுத்து நிறுத்த முடியாது.
வலயத்திற்குற்பட்ட இடமாற்றத்தில் ஏதாவது பிரச்சினை இருப்பின் வலய கல்வி பணிப்பாளருடனும் வலயத்திற்கு வெளியேயான இடமாற்றத்தில் ஏதாவது பிரச்சினை இருப்பின் என்னிடமோ அல்லது மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடமோ எழுத்த மூலம் தெரிவிக்கப்படும் பட்சித்தில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு மாகாண அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே இந்த இடமாற்றம் இடம்பெறுகின்றது.
இதேவேளை, மாகாணத்தில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது" எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’