ஏ தோ ஒரு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகவும் இவர்களாலேயே அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாகவும் பாதுகாப்புப் படைகளின் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
"பொலிஸாரும் இராணுவப் பொலிஸாரும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் முடிவில் தான் அவர்கள் யார் என்பது தெரியவரும்" எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை மாலை யாழ். இராணுவ சிவில் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அளவெட்டியில் கடந்த வியாழனன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் நடைபெற்ற சமயம் தான் கொழும்பில் இருந்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொலைபேசியூடாக தனக்கு நடந்தவற்றை கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு தொடர்பாக தாம் வருந்துவதாகவும், இனிவரும் காலங்களில் இவ்விதமான சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்த அவர், "இலங்கை ஒரு ஜனநாயக நாடு, எவரும் அரசியல் செய்யலாம் அதற்கு இராணுவம் தடையாக இருக்காது" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’