வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 ஜூன், 2011

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா

ரலாற்றுப் புகழ் மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழாவில் கடந்த பல வருடத்தின் பின்னர் பல்லாயிரக்கண்கான அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றினர்.

காலை முதல் ஆலயத்தில் கூடிய அடியவர்கள் பகலில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் பால் குடம், கற்பூரச்சட்டிகள், காவடிகள், தூக்குக்காவடிகள் பறவைக் காவடிகள் என பல கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் இருந்தும் பக்தர்கள் அங்கு வந்து குழுமியிருந்தனர். ஆலய சுற்றாடலில பொதுமக்கள் இரவிரவாக தங்கியிருந்தனர்.யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னர், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாலையில் ஆலய முன்றலில் தீமிதிப்பும் இடம் பெற்றது. கைகால்கள் இழந்தவர்களும் தமது நேர்த்திகளை நிறைவேற்றும் முகமாக பல்வேறு காவடிகளையும் எடுத்து வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. பிற்பகல் 5.00 மணியளவில் வாணத்தில் வட்டமிட்ட ஹெலிகொப்டரில் இருந்து ஆலய கோபுரத்தின் மீது படைத்தரப்பினர் பூக்கள் தூவினர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’