வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 ஜூன், 2011

இசைப்பிரியா ஓர் விடுதலைப் புலி உறுப்பினர்: பாதுகாப்பு அமைச்சு

னல் 4 ஆவணப்படத்தில் ஊடகவியலாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் என மாத்திரம் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தப்பட்டுள்ள இசைப்பிரியா ஓர் விடுதலைப் புலி உறுப்பினரும் ஆவார் என பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


விடுதலைப் புலி இயக்க சீரூடை அணிந்த அவரது அடையாள அட்டை புகைப்படத்தையே அமைச்சு வெளியிட்டு இதன் மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் இசைப்பிரியாக ஈடுபட்டவர்.
1982ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இசைப்பரியா வன்னியில் விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்பு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டவர்.
இசைப்பிரியாவுக்கு லெப்டினல் கேணல் என்ற தகுதி நிலையும் வழங்கப்பட்டிருந்தது. இவர் கடற்புலி படையைச் சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவரை மணம் செய்திருந்தார் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சனல் 4 கொலைக்களம் எனும் ஆவனப்படமானது ஜேம்ஸ் கெமருனால் வெளியிடப்பட்ட அவதார் படத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கிரபிக்ஸ் போன்று செனல்4 ஆவணப்படத்திலும் கிரபிக்ஸ் கையாளப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’