வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 ஜூன், 2011

பிரபாகரனின் மனைவியல்ல தமிழ்ச் செல்வனின் மனைவி: அஸ்வர்

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேணி வருவதாக தான் நேற்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக கூறிவிட்டதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
.
தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகளை அரசாங்கம் பராமரித்து வருவதாகவே தான் கூறவந்ததாகவும் ஆனால் தமிழ்ச் செல்வன் என்பதற்குப் பதிலாக பிரபாகரன் என்று கூறிவிட்டதாகவும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார். இதற்காக சபையினரிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை அஸ்வர் எம்.பி. தனது உரையில் பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் பற்றி குறிப்பிட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளியானதையடுத்து அஸ்வர் எம்.பி. நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
தான் கூறியவை முரண்பாடான வகையில் ஊடகங்களில் வெளியானதாக அவர் தெரிவித்தார்.
அப்போது, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுந்து. அஸ்வர் எம்.பி. தன்னைத்தானே முரண்பட்டுக்கொள்ளக் கூடாது என்றார்.
"நீங்கள் திட்டவட்டமாக அதைக் கூறினீர்கள். அதை நிரூபிப்பதற்காக நான் இறுவட்டுப் பிரதியையும் வைத்திருக்கிறேன். நீங்கள் எப்படி சிறப்புரிமை பிரச்சினை கிளப்பி அதை நிராகரிக்க முடியும்?" என அஸ்வர் எம்.பியிடம் தயாசிறி ஜயசேகர எம்.பி. கேட்டார்.
எனினும், தனது சிறப்புரிமை மீறல் விவகாரம் குறித்த உரையைத் தொடர்ந்த அஸ்வர் எம்.பி., தான் தவறிழைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
"நான் உண்மையில் சொல்ல வந்தது என்னவென்றால் ,தமிழ்ச்செல்வனின் மரணத்திற்குப் பின்னர் அவரின் மனைவியும் பிள்ளைகளும் நன்றாக பராமரிக்கப்படுகிறார்கள். தமிழ்ச் செல்வன் என்பதற்குப் பதிலாக பிரபாகரனின் பெயரைக் கூறியதன் மூலம் தவறொன்றை செய்துவிட்டேன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரதி சபாநாயகரின் சமிக்ஞைக்கிணங்க நான் உரையை நிறைவு செய்யவேண்டிய அவசரத்தில் இருந்தேன். அதனால் நான் தமிழ்ச்செல்வனின் பெயரை குறிப்பிடத் தவறியிருக்கலாம்" என அஸ்வர் எம்.பி. கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’