வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 ஜூன், 2011

பரஸ்பர புரிந்துணர்வின் பேரிலேயே கருணா குழு பாதுகாப்பு படைகளை ஆதரித்தது

ற்போது பிரதியமைச்சராகவுள்ள விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா அம்மான்) இயக்க அங்கத்தவர்களை தந்திரோபாய ரீதியிலோ, தொழிற்பாட்டு ரீதியிலோ இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவில்லை.

மாறாக, வாகரையின் வீழ்ச்சிக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரகசிய இடங்களையும் தளங்களையும் அறிவதற்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவ அதிரடிப்படை – 1 இன் கட்டளையிடும் அதிகாரியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் சாகி கால்லகே தெரிவித்தார்.
யுத்த வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான இன்று யுத்த களத்தில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, கருணாவின் செல்வாக்கு மண்டலமான கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கருணாவின் இயக்க அங்கத்தவர்கள் பங்குபற்றியமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேஜர் ஜெனரல் சாகி கால்லகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'கருணாவின் ஆட்களின் அனுபவமானது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரகசிய இடங்களையும் அவர்களின் தளங்களையும் அறிவதற்கே இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது' என்றார்.
இதேவேளை, 'கருணாவின் இயக்கம் அரசாங்க படைகளுக்கு உதவ வேண்டும் என பலவந்தப்படுத்தப்பட்டார்களா?' என கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த 57ஆவது படையணியின் கட்டளையிடும் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், 'கருணாவின் ஆட்கள் ஒரு பரஸ்பர புரிந்துணர்வின் பேரிலேயே பாதுகாப்பு படைகளை ஆதரித்தனர்' எனக் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’