வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 ஜூன், 2011

சனல் 4 வீடியோக் காட்சிகளை ஆய்வு செய்வதற்கு கொள்கையளவில் தீர்மானம் _

னல் 4 நிறுவனம் வெளியிட்ட வீடியோக் காட்சியை ஆய்வு செய்வதற்கு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.

எனினும் எவ்வாறு மற்றும் எப்போது குறித்த வீடியோக் காட்சி ஆய்வு செய்யப்படும் என்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக் காட்சிகள் தொடர்பில் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறித்து கேட்டபோதே நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.

லக்ஷ்மன் விக்ரமசிங்க இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில் :

சனல் 4 நிறுவனம் இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்டக் வீடியோக் காட்சிகளை ஆய்வு செய்வதற்கு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடல்பான ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆனால் அந்த ஆய்வு எவ்வாறு எங்கு எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் வீடியோக் காட்சிகளை ஆய்வு செய்யவேண்டும் என்று கொள்கையளவில் நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது என்றார்.
இதேவேளை கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த ஆணைக்குழுவானது சுயாதீனமான அமைப்பு எனவும் அவர்கள் தேவைப்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை பெற்று அல்லது தனித்து சனல் 4 தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு நாடளாவிய ரீதியிலான தனது சாட்சியப்பதிவுகளை முடித்துக்கொண்டுள்ள நிலையில் தற்போது சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’