வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 ஜூன், 2011

விடுதலையாவதற்காக 2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கனிமொழி?

தி முக தலைவர் கருணாநிதியின் மகள் கனி்மொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது.

ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். கடந்த 2 மாதங்களாக திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு கிடைத்த ரூ. 204 கோடி கடன் தொகை தொடர்பாக அவரும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இதுவரை தாக்கல் செய்த 3 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியாகி விட்டன. வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்த பின்னர், விசாரணை நீதிமன்றமான சிபிஐ கோர்ட்டை அணுகுமாறு கனிமொழிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவரை அவரால் வெளியே வர முடியாத நிலை.
இந்த நிலையில் வழக்கில் அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அவருக்கு ஜாமீன் உடனடியாக கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிமொழி அப்படிச் செய்வார் என்பதும் சந்தேகம்தான்.
அப்ரூவராக கனிமொழி முடிவு செய்தால் அது திமுகவுக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதால் அதுகுறித்து ஒன்றுக்கு நான்கு முறை கனிமொழியும், கருணாநிதி குடும்பத்தினரும் யோசிக்கலாம் என்று தெரிகிறது.
அதேசமயம், கனிமொழி அப்ரூவராக மாறி, மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை வெளியிட்டால் அது காங்கிரஸுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் கனிமொழி அப்ரூவராக மாறக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’