எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.(உ/த) பரீட்சையில் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் 185 முன்னாள் போராளிகள் தோற்றவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சையில் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து தோற்றிய முன்னாள் போராளிகளில் 50 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் புனர்வாழ்வு நிறைவுசெய்து விடுவிக்கப்பட்டுள்ளமையினால் வீடுகளிலிருந்து க.பொ.த.(உ/த) கற்பதாக மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க கூறினார்.
புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 106 முன்னாள் பெண் போராளிகளுக்கு விசேடமாக ஆடை வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அடுத்த மாத முற் பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளில் 600 போர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க, இறுதி கட்ட யுத்ததின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட அனைத்து முன்னாள் போராளிகளும் விடுதலை செய்யப்படுவர் என குறிப்பிட்டார்.
எனினும் நீதிமன்ற உத்தரவிற்கமைய புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பயிற்சி பெற வந்தவர்கள் நீதிமன்ற தண்டனை காலம் முடிந்த பின்னரே விடுதலை செய்யப்படுவர் என அவர் தெரிவித்தார்.
தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏழு புனர்வாழ்வு நிலையங்களில் சுமார் 3,500 முன்னாள் போராளிகள் மாத்திரமே புனர்வாழ்வளிக்கப்படுவதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’