வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 17 ஜூன், 2011

கே.பி. உட்பட 13 பேரிடம் நெதர்லாந்து புலனாய்வாளர்கள் விசாரணை

மிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள், குமரன் பத்மநாதன் (கே.பி.) மற்றும் ஏனைய முன்னாள் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 12 பேரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

புலிகளின் முன்னாள் பிரதான ஆயுதக்கொள்வனவாளரான கே.பி. தற்போது அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்படி நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் இவ்விசாரணைகள் பல நாட்கள் நீடிக்கும் எனவும் கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்விசாரணைகள் தற்போது நடைபெறுவதாகவும் ஆனால் விசாரிக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களையோ விசாரணை நடைமுறைகள் குறித்த தகவல்களையோ வெளியிட முடியாது என நெதர்லாந்து தூதரக முதன்மைச் செயலர் ஜகோ பீரென்ட்ஸ் தெரிவித்தார். இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிடம் நெதர்லாந்து நீதயமைச்சு விடுத்த கோரிக்கையின் பேரில் இவ்விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’