வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 7 மே, 2011

போர்க் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தானே விசாரிப்பதாக இலங்கை வாக்குறுதி வழங்க வேண்டும்: ஆனந்தசங்கரி

போ ர்க் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தானே விசாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையரசு வாக்குறுதி வழங்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தருஸ்மான் அறிக்கைக்கு விபரமான பதில் அனுப்புவதாக அரசு எடுத்த தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன். ஆரம்பத்தில் இருந்தே அரசு இதனை எதிர்நோக்க வேண்டும் என்றும் நாட்டின் சரித்திரத்தில் இதையொரு நிரந்தர கரும்புள்ளியாக இருக்கவிடாது இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து கௌரவமாக விடுபட வேண்டும் என்ற கருத்தை நான் கொண்டிருந்தேன்.
இவ்வறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதேயன்றி தனிப்பட்ட பான் கீ மூனிற்கு அல்ல. பான் கீ மூன் வகிக்கும் ஐக்கியநாடுகள் செயலாளர் பதவி மிக கண்ணியமானதும் பல்வேறு நாடுகளால் தேர்ந்து எடுக்கப்பட்ட பதவியுமாகும்.
ஆகவே, அவர் மீது சேறு அடிக்கப்படுவது ஐக்கிய நாடுகள் சபையின் எந்த ஒரு அங்கத்துவ நாடும் இலங்கையரசுடன் எத்தகைய உறவைக் கொண்டிருந்தாலும், அச்செயலை ஒரு போதும் அங்கீகரிக்காது. என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது தமது தார்மீகக் கடமை என்றே உணர்ந்து செயற்படும். ஆகவேதான் எந்த விடயத்திலும் எந்த நாட்டுடனும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ மட்டுமே ஈடுபட வேண்டும். நாடு முழுவதும் அறிக்கையை வாபஸ் பெறுமாறு கூறி ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரித்தல் மற்றும் அவரின் பெயரை கிண்டல் செய்தல் போன்றவற்றை எவருமே தமதெண்ணப்படி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டமே.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கை ஐனாதிபதியை நிறுத்தி போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்று; பல்Nறு அமைப்புக்களும் பல்வேறு நாடுகளில் வேண்டுவதென்பது வெறும் கேலிக்கூத்தானதாகும். இலங்கையில் புகுந்து ஐனாதிபதியை கைது செய்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல யாருக்கு தைரியம் வரும்? அல்லது பிறநாட்டில் வைத்து கைது செய்ய எந்த அதிகாரியிடம் அனுமதி பெற முடியும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் இத்தகைய கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் இலகுவாக புகழ் சம்பாதிக்கவும் பணம் சேகரிக்கவுமேயன்றி இதனால் எதுவித பயனும் கிட்டப் போவதில்லை. அரசாங்கப்படைகளால் கிளிநெச்சி கைப்பற்றப்பட்ட போது இக்கட்டத்திலேனும் அப்பாவி பொதுமக்களையும் எஞ்சியுள்ள புலிப் போராளிகளையும் பல கோடி பெறுமதியான சொத்தக்களையும் காப்பாற்றுமாறு பிரபாகரனிடம் மன்றாட்டமாக கேட்டிருந்தேன். அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை.

ஆனால் மேற் கூறப்பட்டவற்றில் அனேகமானவை ஒன்றில் இழக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டுமுள்ளன. இத்தகைய ஒரு வேண்டுகோளை குறிப்பாக அப்பாவி மக்களையும்இ பெண்கள் மற்றும் குழந்தைகளையும் காப்பாற்றித்தருமாறும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்குமாறும் தமிழ் அரசியற் கட்சிகளை வேண்டியிருந்தேன். அவர்களும் அதற்கு செவிசாய்க்கவில்லை.

அதே போன்று ஐனாதிபதிக்கும் கிளிநெச்சி பிடிபட்டவுடன் நீங்கள் யுத்தத்தை வென்றுவிட்டீர்கள். சில நடவடிக்கைகள் தொடரும் போது ஒருவருடமானாலும் கூட ஒரு அப்பாவி உயிர்தானும் இழக்கக்கூடாது எனக் கேட்டிருந்தேன். யுத்தத்தை நிறுத்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு விடுதலைப்புலிகளுக்கு சார்பான ஒரு அமைப்பும் அவாகளை கேட்பதற்கு மாறாக அவர்களின் செயற்பாடுகளை பாராட்டியும் யுத்தத்தை தொடருமாறு தூண்ட பெரும் தொகை பணத்தையும் வன்னிக்கு வாரி இறைத்தனர்.

யுத்தத்தை தொடர்வதை விடுதலைப்புலிகளின் குற்றமாக சிலர் கருதினர். அத்தகைய மிகச்சிலரில் நான் மட்டும், உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்த பொதிலும் அவ்வாறு செய்தமைக்கு 'தமிழினத்தின் துரோகி' என பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இலங்கையில் உள்ள சில ஊடகங்கள் உட்பட சர்வதேசதிலுமுள்ள தமிழ் ஊடகங்களும் எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் தோக்கத்தோடு கௌரவமற்ற சொற்களைப் பாவித்து விமர்சித்தன. சில சமயம் விடுதலைப்புலிகள் மீதுள்ள பயத்தின் காரணமாக அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகள் காலத்தில் செய்தவற்றுக்கு இன்று பரிகாரம் தேடுவதில் அவர்களுக்கு இருக்கும் தடை என்ன? என்றுதான் புரியவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் அவசியமற்று இருப்பினும் ஐனாதிபதி அவர்கள் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலங்களில் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதும் கூட என்னை அரசாங்கத்தின் முகவர் என சில அரசியற் கட்சிகள் குற்றம் சாட்டின. அதில் எதுவித உண்மையும் இல்லை. 2009ம் ஆண்டு 03ம் மாதம் 12ம் திகதி நான் திரு பிரபாகரனுக்கு எழுதிய கடிதத்தில்,

'உமது கட்டுப்பாட்டின் கீழ் நீர் வைத்திருக்கும் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்து முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது. உம்மையும் உமது சந்ததியினரையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்றும் உம்மை தொடர்ந்து ஆதரிப்பவர்களையும், அவர்களின் சாபம் விட்டுவைக்காது. இப்போதாவது உமது மனதை மாற்றி நீர் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யும்படி கேட்கின்றேன். அம்மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டும்' என்று குறிப்பிட்டேன்.

அவரிடம் செல்ல அனுமதி உள்ளவர்கள் எவரும் வெற்றிகரமாக அதைச் செய்திருக்கமுடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. அவருக்கு மிக நெருக்கமாக உள்ளவர்கள் கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழ் நாட்டுத் தலைவர்கள் கூட எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கலில்லை. அவர்கள் எல்லோரும் யுத்தத்தை தொடருமாறே ஊக்குவித்தனர். இன்று இந்த நிலையை எதிர் நோக்குவதற்கு இத்தகைய செயல்களே காரணமாக இருந்தன.தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தினமும் இலங்கை ஐனாதிபதியை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்ப்பட்டங்கள் நடைபெறகின்றன.

தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் அனைத்திலும் பல கல்விமான்கள் அங்கம் வகிக்கின்றனர். எது செய்ய முடியும் அல்லது எது செய்ய முடியாது என்று இவர்கள் அறிந்திருக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் தமிழீழக் கோரிக்கையை இவர்கள் ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்கள் இந்த நிலை ஏற்பட்டமைக்கு பொறுப்பு கூற வேண்டும். தமிழ் நாட்டுத் தலைவர்கள் சிலர் இந்திய அரசில் மாற்றம் ஏற்படப் போகின்றதெனவும் புதிய அரசு புலிகளுக்கு சார்பாக அமையும் என்றும் நம்பிக்கையூட்டியிருந்தனர்;. யுத்தத்தின் கடைசி நாட்கள்pல் ஒரு குறுகிய இடத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்திய தேர்தல் முடிவு வரும் வரைக்கும் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். ஆயுதக்குழுக்கள் உட்பட எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் மக்களுடன் கலந்திருந்தனர். இருந்தும் யுத்தம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் கப்பல்களு;ககு வழித்துனை வழங்க சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மறுத்ததால் மக்கள் உணவின்றியும் குழந்தைகள் பால் இன்றியும் பசியால் இறக்கத் தொடங்கினர். செல் அடியோ கட்டுப்பாடின்றி தொடர்ந்தது. உயிரிழப்புக்களும் அதிகரித்தன.

ஒரு கட்டத்தில் நோயாளிகளையோ காயமடைந்தவர்களையே பராமரிக்க எந்த ஊழியர்களும் இன்றி உயிரிழக்க விடப்பட்டனர். இந்த நிலைக்கு காரணம் யார்? விடுதலைப் புலிகளா அல்லது அரசாங்கமா அல்லது தமிழ் நாட்டிலும் ஐரோப்பா கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள அனுதாபிகள் ஆதரவாளர்களா காரணம்?.

பாதிப்புக்குளானோரின் தொகை ஆயிரக்கணக்கில் உயர்ந்தது. கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. பல்வேறு துண்பங்களை அனுபவித்த மக்கள் தமது இழந்த சொத்துக்களை பற்றி நினைக்காது தம்மை விட்டுப் பிரிpந்த உறவுகளை எண்ணியே இன்றும் துக்கம் கொண்டாடுகின்றனர். இழந்த உயிர்களை மீட்க முடியாது. போர்க்குற்றத்திற்காக அரச படையினரை விசாரித்தல் எதுவிதத்திலும் உதவப் போவதில்லை. இவ் யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து இராணுவத்தினரும் இன்று வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளனர். எனது வெளிப்படையான அபிப்பிராயம் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் என்ற நிலைப்பாட்டை கொள்ளுமாறு ஆறுதல் கூறி சகல நாடுகளும் ஒன்றிணைந்து அவர்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சொத்து இழப்புகளுக்கு நட்ட ஈடு வழங்க ஆவன செய்யவதோடு அவர்களின் உள்ளங்களை சாந்தப்படுத்த முடிந்த எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை முற்று முழுதாக வாபஸ் பெறுவதற்கு சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு துவக்கைக் கண்டால் கூட பெண்கள் கிலி கொண்டு ஓடுகிறார்கள். விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுப்பார்கள் என்பது என்றும் நடக்கப் பொவதில்லை. இருப்பினும் வடக்கு கிழக்கில் இராணுவம் நிலை கொண்டு இருக்க வேண்டும் என அரசாங்கம் பிடிவாதம் பிடித்தால் யுத்தம் தொடங்க முன்னர் இருந்த முகாங்களுக்குள் முடக்கி வைக்க வேண்டும்.

சகல நாடுகளும் ஒன்றிணைந்து ஐனாதிபதிக்கு தேவைப்படும் உத்தரவாதத்துடன் சமஷ்டி அடிப்படையிலோ அல்லது அதற்கு மாறாக இந்திய அரசியலமைப்பையோ ஒத்ததாக மிக விரைவில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண உதவ வேண்டும். இரவோடு இரவாக மாற்றக் கூடிய என்றும் நிரந்தரமான தீர்வாக அமைய முடியாத ஒற்றையாட்சியின் கீழ் என்றும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது.

முடிவாக போர்க் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தானே விசாரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையரசு வாக்குறுதி வழங்க வேண்டும். இலங்கையரசின் ஜனாதிபதியாக செயல்பட்டு நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை ஏற்று கொண்டு போர்க்குற்றவாளிகளை விசாரிக்க ஒரு விசேட நீதி மன்றம் அமைக்க வேண்டும். அதே போல் முப்படைகளின் தளபதி என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போர்வீரர்களுக்கு சட்ட ஆலோசனை பெற வசதி செய்ய வேண்டும்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’