நாட்டின் அச்சமான சூழ்நிலையில் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய எதிர்க்கட்சி வேட்பளார்களின் பட்டியலில் தனது பெயரை சேர்த்தாகவும் ஆனால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வெள்ளைக்கொடி வழக்கில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி உத்தியோகபூர்வ வைபவங்களில் தன்னை (பொன்சேகாவை) இகழ்ந்து பேசியதாகவும் மத்திய வங்கி உயரதிகாரி காமினி விக்கிரமசிங்க, ராஜித சேனாரட்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் வண. எல்லாவள மேதானந்த தேரர், வண.உடுவே தம்மாலோக தேரர் ஆகியோர் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டாமெனக் கோரியதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
'ஜனாதிபதியின் செயலாளர் என்னை சந்தித்தபோது அனைத்தையும் விளக்கினேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து லலித் வீரதுங்க விசாரித்தார். இராணுவத்தில் இருக்கும்வரை நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என நான் பதிலளித்தேன் எனவும் பொன்சேகா கூறினார்.
அரசியலை வெறுத்த போதிலும் நாட்டின் மோசமான நிலை கருதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக கூறிய பொன்சேகா, இதனால் ஜனாதிபதியும் தன்னை மதித்த ஏனையவர்களும் தன்னை அவமானப்படுத்த தொடங்கியதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.
தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்தபோது பாதுகாப்பு செயலாளர் தனது அங்கீகாரமின்றி பல கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபட்டதாக பொன்சேகா தெரிவித்தார்.
குண்டுதுளைக்காத பி.எம்.டபிள்யூ கார்கள் நான்கை கொள்வனவு செய்தமை அவற்றில் ஒன்றாகும். அத்தகைய காரின் வழக்கமான விலை 45 மில்லியன் ரூபா. எனினும் 88 மில்லியன் ரூபா வீதம் அவை வாங்கப்பட்டன என அவர் கூறினார்.
சார்க் மாநாட்டுக்காக உயர்தரமான பென்ஸ்கார்கள் 55 மில்லியன் ரூபா வீதம் இறக்குமதி செய்யப்பட்டன எனக் கூறிய பொன்சேகா, யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பாதுகாப்பு அமைச்சினால் வாங்கப்பட்டதாகவும் அவற்றின் விலைகளை பாதுகாப்பு செயலாளரே தீர்மானித்தார் எனவும் கூறினார். இராணுவத் தளபதி என்ற வகையில் இராணுவத்திற்கு என்ன தேவை எனன பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பதே இதில் தனது வேலையாக இருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
4 ஆவது ஈழப்போரின் ஆரம்பத்தில் 130 மி.மீ ஆட்லறி குண்டுகள் 250 அமெரிக்க டொலர்கள் வீதம் வாங்கப்பட்டதாகவும் 3 வருடங்களுக்குள் யுத்தத்தின் இறுதியில் 650 டொலர்கள் வீதம் அவை வாங்கப்பட்டதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.
சண்டே லீடர் பத்திரிகைக்கு தான் செவ்வியொன்றை வழங்கியதாகவும் ஊடகவியலாளர் ரஷ்மிகா விஜேவர்தன, பிரெட்ரிக்கா ஜேன்ஸ், சண்டே லீடர் பத்திரிகை உரிமையாளர் லால் விக்கிரதுங்க மற்றும் புகைப்படவியலாளர் ஒருவர் ஆகியோர் அங்கிருந்ததாகவும் பொன்சேகா கூறினார்.
'ரஷ்மிகா விஜேவர்தன சுமார் அரை மணித்தியாலம் என்னை செவ்வி கண்டார். பிரெட்ரிகா எனன்னை செவ்வி காணவில்லை.
அந்த செவ்வியின் பின்னர் பிரெட்ரிகா ஜேன்ஸும் லால் விக்கிரமதுங்கவும் சினேபூர்வமாக என்னுடன் உரையாடினர். அப்போது தேர்தல் பணிக்காக ஐ.தே.க. வழங்கிய ஒரு மில்லியன் ரூபா எப்படி பயன்படுத்பட வேண்டும் என கேட்டனர். வடக்கின் யுத்தம் மற்றும் வெள்ளைக் கொடி விவகாரம் பற்றியும் அவர்கள் கேட்டனர்' என பொன்சேகா கூறினார்.
அந்த விசயம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது களத்திலிருந்த இரு ஊடகவியலாளர்கள் தன்னிடம் கூறியது என அவர்களிடம் தெரிவித்தாக பொன்சேகா கூறினார்.
'அவர்களை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டார்' என்ற சொற்களை தான் ஒருபோதும் கூறவில்லை எனவும் பொன்சோக தெரிவித்தார்.
இவ்வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’