மு ப்பது வருட காலம் நடந்த யுத்தத்தின் போது நாம் இழந்த இலட்சக் கணக்கான உடைமைகள் மற்றும்; உயிர்கள் பற்றி ஒரு வசனம் கூடத் தெரிவிக்காமல் இறுதிநேர யுத்தத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஐந்து உரிமை மீறல்கள்; பற்றி மட்டுமான விடயங்களைப் பற்றி விசாரணை நடத்தக் கோரும் ஐ.நா. நிபுணர் குழுவின் யோசனை புத்தி சாதுர்யமான ஒன்றல்ல என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள பொக்காவலை என்ற இடத்தில் உள்ள பௌத்த விஹாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
முப்பது வருடங்கள் எமது நாடு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. சிங்கள மன்னர்கள் நாட்டைக் காத்தது போல பல்வேறு சிரமங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் எமது நாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்கள் பாதுகாத்து சுதந்திர நிலைமை ஒன்றை ஏற்படுத்தினார். இன்று நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது எமது நாடு இழந்த உயிர்கள் மற்றும் உடமைகள் எண்ணிலடங்காதது.
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகள் ஆகினர். 60 000 இற்கும் அதிகமான இளைஞர்கள் அங்கவீனர்களாகினர். மூன்று இலட்சம் பேர் அகதிகளாகினர்.
முழு நாட்டிலும் கொலை செய்யப்பட்ட அனைத்து இனங்களையும் சேர்ந்த பொது மக்களின் எண்ணிக்கை குறிப்பிட முடியாத பெருந்தொகையாகும். நாம் இழந்த சொத்துகளின் பெறுமதி கணக்கிட முடியாதது. எத்தகைய இழப்புகளைச் சந்தித்த போதும் இவைகள் பற்றி ஒரு வசனம் கூட நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
எனவே இவ்வறிக்கையை தயாரித்தவர்களது புத்தி சாதுர்யம் சந்தேகத்திற்கு இடமானது என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்தன ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’