எம் .வி. சன் ஸீ கப்பலில் கனடாவுக்குச் சென்ற மற்றொரு இலங்கை தமிழ் குடியேற்றவாசியை நாடுகடத்துமாறு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் அவரின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளில் பங்குபற்றியமையே இதற்கான காரணமாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வீடியோவொன்றில் தோன்றியதாகவும் அவர் மீதுகுற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எம்.வி.சன் ஸீ கப்பலில் சுமார் 500 பேர் கனடாவுக்குச் சென்றனர். இவர்களில் நாடுகடத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 4 ஆவது நபர் இவராவார்.
இந்நபர் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் முறைப்படியான அங்கத்தவராக இருக்கவில்லை என கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் மத்தியஸ்தர் ஜெவ் ரெம்பெல் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இந்நபர் எல்.ரி.ரி.ஈ.யின் வெறும் அனுதாபி என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர் என ரெம்பெல் கூறியுள்ளார்.
இவர் பங்குபற்றிய கற்பனை வீடியோ படம் இலங்கைப் படையினரை தாக்குவதை சித்தரிப்பதாகவும் எல்.ரி.ரிஈ.யினர் பயிற்சி பெறும் காட்சிகளையும் கொண்டுள்ளதாகவும் ரம்பெல் கூறினார்.
குடியேற்றவாசியின் சட்டத்தரணி ஷெப்பரட் மோஸ் வாதாடுகையில், இப்படம் வெறும் பொழுதுபோக்கு படமாக இருக்கலாம் என்றார்.
ஆனால் ரம்பெல் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த படம் ஜோன் வெய்ன், டொம் குருஸ் ஆகியோரின் ஹெலிவூட் படங்களைப் போன்று வசூலை குவிப்பதற்காக தயாரிக்கப்படவில்லை. இந்த படம் எல்.ரி.ரி.ஈ.யின் யுத்த இலக்குகளுக்கு ஆதரவை தேடுவதற்காக தயாரிக்கப்பட்ட பிரச்சார படம் என்ற (பொதுமக்கள் பாதுகாப்பு) அமைச்சரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என ரம்பெல் தெரிவித்தார்.
எம்.வி. சன் ஸீ கப்பல் அகதிகள் 15 பேர் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’