வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 மே, 2011

முகமாலை தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: சரத் பொன்சேகா

மு'கமாலையில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முறியடிக்கப்பட்டன. இதனால் படைத்தரப்பு தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் அப்போது அடைந்த தோல்வியின் மூலம் நான் சில பாடங்களைக் கற்றுக்கொண்டேன்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று ட்ரயல் அற்பார் நீதிபதிகள் மூவர் முன் தனது நீதிமன்ற அறிக்கையை தொடரும் பொது குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, 'நான் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதால் விடுதலைப் புலிகள் இயக்கம் கலக்கமடைந்தது. நான் தளபதியாக பதவியேற்ற பின் ஆற்றிய உரையில் இந்த கொடிய யுத்தத்தை எமது பிள்ளைகளிடம் விட்டுச் செல்ல மாட்டேன் என கூறினேன்.
நான் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் எனக்கு பெருமை சேர்க்க வேண்டும் என நான் எதையும் செய்துகொள்ளவில்லை. ஆனால் இராணுவத்தின் புகழுக்காக நான் செயற்பட்டேன்.
நான் பதவியேற்ற பின் இராணுவத்தினருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. இது ஈழ யுத்தத்தை நாம் வெல்ல காரணமாயிற்று. நான் சாதித்த வெற்றியையிட்டு மக்கள் மகிழ்ச்சிக் களிப்பில் உள்ளதைப் பார்க்க நான் ஆவலாயிருந்தேன். இருப்பினும் அவற்றைக் காண எனக்கு அனுமதியில்லை.
அமெரிக்காவிலிருந்து கடந்த மே 20ஆம் திகதி இலங்கைக்கு வந்த போது எனது மகளை புலனாய்வு பொலிஸார் விசாரணைக்குட்படுத்தினர். இது அவரது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.
ஈழ யுத்தத்தை வென்ற பின் அடுத்துடுத்து வந்த இரண்டு புதுவருடக் கொண்டாட்டங்களையும் சிறையில் கழித்துள்ளேன். ஏன் மீது விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்ட மூன்று தாக்குதல்களிலிருந்து தப்பினேன்.
இராணுவத்தை விட்டு விலகி வெளிநாட்டில் வசதியாக வாழக் கிடைத்த வாய்ப்புக்களை உதாசீனம் செய்து நாட்டுக்காக உழைத்தேன். நான் நாட்டையோ இராணுவத்தையோ காட்டிக்கொடுக்கவில்லை.
திறமையீனத்துக்காக என்னால் பதவியிறக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் எனக்கெதிரான பிரசாரத்துக்குப் பயன்படுத்தியுள்ளது' என்றார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’