வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 மே, 2011

ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டொலர்களுக்கு வாங்கியது மைக்ரோசொவ்ட்

ணையம் மூலமான தொலைபேசி சேவைவழங்கும் பிரபல 'ஸ்கைப்' (Skype) நிறுவனத்தை மைக்ரோசொவ்ட் நிறுவனம் 8.5 பில்லியன் டொலர்களுக்கு (93,098 கோடி இலங்கை ரூபா) வாங்குவதற்கு இன்று சம்மதித்துள்ளது.


மைக்ரோசொவ்ட் நிறுவனம், மற்றொரு நிறுவனத்தை வாங்குவதற்கு அதன் வரலாற்றில் செலுத்தும் மிகப்பெரிய தொகை இதுவாகும்.
லக்ஸ்ம்பர்கை தளமாகக் கொண்ட ஸ்கைப் நிறுவனம் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அதற்கு 663 மில்லியன் வாடிக்கையாளர் உள்ளனர்.
சுவீடனைச் சேர்ந்த நிகலஸ் ஸென்ஸ்ட்ரோம் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த ஜானுஸ் பிரிஸ் ஆகியோர் ஸ்தாபித்த ஸ்கைப் நிறுவனத்தை பிரபல ஏலவிற்பனை இணையத்தளமான ஈ-பே 2006 ஆம் ஆண்டு 200 கோடி டொலர்களுக்கு வாங்கியது.
பின்னர் 2009 ஆம் ஆண்டு 70 சதவீதமான பங்குகளை 200 கோடி டொலர்களுக்கு அந்நிறுவனம் மீள் விற்பனை செய்தது.
இப்போது அந்நிறுவனத்தை 850 கோடி டொலர்களுக்கு மைக்ரோசொவ்ட் நிறுவனம் வாங்குகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’