வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 ஏப்ரல், 2011

இந்து ஆலயத்தை சுனாமி அகதிகள் முகாமாக காட்டிய பயண வழிகாட்டி

ளுத்துறையிலுள்ள இந்து ஆலயமொன்றுக்கு பிரித்தானிய உல்லாசப் பிரயாணியொருவரை அழைத்துச் சென்ற உள்ளூர் உல்லாசப் பயண வழிகாட்டியொருவர் , அக்கோவிலில் சுனாமி அகதிகள் தங்கவைக்கப்பட்டிருப்பதாக பிரித்தானிய உல்லாச பயணியை நம்பவைத்து அவர்களுக்கு உதவுவதெற்கென பணம் பெற்றமை அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் களுத்துறை பொலிஸார் சம்பந்தப்பட்ட கோவிலின் குருக்களிடம் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளனர்.
உல்லாசப் பயணிகளை பயண வழிகாட்டிகள் மதவழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அத்தலங்களுக்கு உதவுவதற்கென பணம் பெற்ற பல சம்பவங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமந்த வெதகே, குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உதவி இன்ஸ்பெக்டர் சுனெத் சாந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’