வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஏப்ரல், 2011

இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறார் விமல்

ஐ. நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இலங்கைக்கு சார்பான பிரதிபலிப்பை இந்தியாவிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.

'நிபுணர் குழு அறிக்கை எனக்கூறப்படும் அறிக்கைக்கு எதிராக எமக்கு சாதகமான பிரதிபலிப்பை இந்தியாவிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்' என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். இந்த அறிக்கைக்கு எதிராக ரஷ்ய, சீனத் தூதுவர்கள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
'ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மகிழ்ச்சிப்படுத்த விரும்பும் அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளுக்கு விளக்கமளிப்பதில் அர்த்தமில்லை. நடுநிலையான நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாடுகளுக்கு ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் விஜயம் செய்வர்' எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’