வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 ஏப்ரல், 2011

நன்றி கெட்ட குஷ்பு-நேரம் சரியில்லாத வடிவேலு: விந்தியா தாக்கு

திமுக வேட்பாளர் சோமசுந்தரம், உத்திரமேரூரில் அதிமுக வேட்பாளர் கணேசன் ஆகியோரை ஆதரித்து நடிகை விந்தியா ஓரிக்கை மற்றும் காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்து பேசினார். அவர் கூறுகையில்,

இது மிக முக்கியமான தேர்தல். கடந்த தேர்தலில் ஏமாந்து ஓட்டு போட்டுவிட்டீர்கள். அதன் பலனை அனுபவித்து விட்டீர்கள். ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது?, நாம் அப்படியே இருக்கிறோம். அதே வீடு. அதே கடை. அதே வியாபாரம். நமக்கு விடிவு இல்லை.
திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றம், மின்தடை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டுமல்ல, மற்ற பலரும் காரணம். ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழக மக்கள் நன்றாக இல்லை.
ஐந்து ஆண்டுகளில் தமிழக மக்களை ஓட்டாண்டிகளாக்கி விட்டனர். இவர்களை நம்பிய மக்களுக்கு ஒரு ரூபாய் உளுத்துப் போன அரிசியை வழங்குகின்றனர்.
தற்போது, அவர்களுக்காக வடிவேலு பேசுகிறார். ஸ்பெக்ட்ரம் குறித்து அவர் பேசாதது ஏன்?. அதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லையா?. குஷ்பு அக்கா ஏ.சி காரில் போகிறார். அவருக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் செல்கின்றனர். அவருக்கு எப்படி மக்களின் கஷ்டம் தெரியும்?.
தமிழகத்தில் அராஜகம் அதிகரித்துள்ளது. இந்த நிலை மாற அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தை காப்பாற்ற, ஊழல் செய்தவர்கள் தண்டனை பெற புரட்சித் தலைவியாம் தானைத் தலைவி ஜெயலலிதா அம்மா முதல்வராக வேண்டும். கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு தண்டனை. திமுகவுக்கு ஓட்டு போட்டால் ஐந்து ஆண்டுகள் தண்டனை. 2006ம் ஆண்டு தேர்தலில் ஏமாந்து ஐந்து ஆண்டு தண்டனையை அனுபவித்து விட்டீர்கள். இந்த முறை ஏமாந்து விடாதீர்கள்.
கருணாநிதி பகுத்தறிவாளர் என்கிறார். அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள் அனைத்திலும் பூஜையறை உள்ளது. சாய்பாபா காலில் விழுந்து தயாளு அம்மாள் வணங்கினார். கருணாநிதி புகழ் பாடும் குஷ்பு, மசூதி, கோவில் என செல்பவர். அவர் ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சி நடத்திய போதுதான் தமிழ் பேசவே கற்றுக்கொண்டார்.
அதுவரை டப்பிங் குரல் தான். அந்த நன்றியை மறந்து விட்டார். வடிவேலு அண்ணா ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுக்கு நேரம் நல்லா இல்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’