வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஏப்ரல், 2011

ஆர்ப்பாட்டம் நடத்தும் உத்தேசமில்லை: வெளிவிவகார அமைச்சர்

.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களையும் கிளர்ச்சிகளையும் நடத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ராஜதந்திரிகளை சந்தித்தபோது இவ்வாறு கூறியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிலரால் கூறப்படுவதைப் போல், வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் கிளர்ச்சிகளையும் நடத்தும் உத்தேசம் அரசாங்கத்திடம் இல்லை. நாம் ஹிஸ்டீரியாவையோ வன்முறைகளையோ ஐ.நா சமூகத்துக்கு அல்லது ஏனைய வெளிநாட்டு தூதரகங்களுக்கு அசௌகரியங்களையோ தூண்டிவிடவில்லை. அந்த குற்றச்சாட்டுகள் தற்போதைய உணர்வு பூர்வமான சூழ்நிலையில் இந்நாட்டின் புகழை மங்கச் செய்யும் அரசியல் நிகழ்ச்சிநிரல் கொண்டவர்களினால் சுமத்தப்படுவதாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’