வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 ஏப்ரல், 2011

வெள்ளைக்கொடி வழக்கில் பதிலளிக்க நாட்டின் நிலைமை கருதி மேலும் அவகாசம்

நா ட்டில் காணப்படும் பதற்ற நிலையின் காரணமாக வெள்ளைக்கொடி வழக்கில் உடனடியாக பதிலளிக்க முடியாமல் உள்ளதால் மே 4ஆம் திகதிவரை அவகாசம் தரும்படி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது.


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் வழக்குறைஞரான லத்துவஹெட்டி, 'சரத் பொன்சேகா நீதிமன்றில் ஒரு அறிக்கை தர வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளார். ஆனால் நாட்டில், யுத்தத்துக்குப் பிந்திய விடயங்கள் தொடர்பில்அ பதற்றமான நிலைமை காணப்படுவதால் தனது நிலைப்பாட்டைப் பற்றி யோசித்து அது தொடர்பில் தீர்மானம் எடுக்க இன்னும் நேரம் தேவைப்படுகிறது' எனக் கூறினார்.
பிரதிவாதி நேர்மையாக இந்த வேண்டுகோளை விடுப்பாரானால் அது அனுமதிக்கப்படுவதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் புவனேக்க அறிவுரை கூறினார். இதை கவனத்திற்கொண்ட நீதிமன்றம் பிரதிவாதிக்கு மே 4ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’