இ ங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணித் தலைவராக திலகரத்ன டில்சான் இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.
உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு குமார் சங்கக்கார அணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து டில்சான் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் அணியின் உபத் தலைவர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை எனவும் டில்சான் இங்கிலாந்து தொடருக்கு மாத்திரமே தலைமை தாங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வருடமாக தேசிய அணியில் இடம்பெற்றுள்ள டில்சான் 66 டெஸ்ட் போட்டிகளிலும், 203 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
டில்சான் தலைமையிலான 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’