வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 ஏப்ரல், 2011

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவரை மகாராணி கௌரவித்தமைக்கு அரசு கண்டனம்

நா டு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவரை மகாராணி கௌரவித்தமையையும் கௌரவிப்பதற்காக நியூஸிலாந்து அரசாங்கத்தினால் அவர் தெரிவு செய்யப்பட்டமையையும் எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்பதுடன் அந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிகின்றது என்று அமைச்சர் டிலான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ரஜீவ விஜேசிங்க எம்.பி.யினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான ஆறுமுகம் தேவராஜன் நியூஸிலாந்து அரசாங்கத்தினால் கௌரவிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டமையை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கிறது.
இதுதொடர்பில் நியூஸிலாந்து அரசாங்கத்திடம் வினவியபோது தெரிவின்போது நாடுகடந்த அரசாங்கமாக நாம் பார்க்கவில்லை வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்றே பார்த்தோம் என்று பதிலளித்திருக்கின்றது.
நியூஸிலாந்து அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள பதிலில் நாம் திருப்திகொள்ளவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்டவிரோதமானது.
அதனை எந்தவொரு அரசும் ஏற்கவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எந்தவொரு அரசாங்கமும் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவ்வாறானதொரு நபரை விருந்துக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என்றார்.
இதேவேளை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜேயசிங்க,
மகாராணியினால் அண்மையில் வழங்கப்பட்ட புதுவருட விருதுகளில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் என அழைக்கப்படுவதன் ஓர் உறுப்பினராகிய ஆறுமுகம் தேவராஜன் என்பவரை கௌரவிப்பது பொருத்தமானதென நியூஸிலாந்து அரசாங்கம் கருதியதையிட்டு எனது அதிர்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எல்லா சமூகங்களுக்கிடையிலும் மீளிணக்கம் ஏற்படுவது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படும் நிலையில் இலங்கையின் போருக்குப் பிந்திய சூழ்நிலையில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை பின்பற்றும் ஒரு தனி ஆளுக்கு அத்தகைய விருது வழங்கப்பட்டிருப்பதையிட்டு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேரழிவு மிக்க கிறிஸ்சேர்ச் பூகம்பத்தைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கு உதவி அளிப்பதில் இலங்கை மேற்கொண்ட துரிதமான பதில் நடவடிக்கையைப் பாராட்டுவதற்கும் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சாதகமான வர்த்தகத் தொடர்புகளைப் பாராட்டுவதற்கும் இது பிரதானமாக, பொன்டெரா மூலம் இலங்கைக்குப் பால் மா ஏற்றுமதி ஊடாக நியூஸிலாந்து பொருளாதாரத்துக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பங்களிப்புச் செய்வதைத் தெரிவிப்பது மட்டுமன்றி இந்தக் கவலை தொடர்பான உடனடியான பதில்களை உறுதிப்படுத்துவதற்கும் அவ்வாறே பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலொன்றில் அர்த்தமற்று ஈடுபடுவதன் மூலம் இரண்டு நாடுகளினதும் மக்களுக்கிடையே நிலவும் நல்லுறவுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை தெரிவிப்பதற்கும் வெளிவிவகார அமைச்சை வலியுறுத்துகின்றேன் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’