தா ன் ஜனாதிபதியின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எனக்கூறிக்கொண்டு விமானப்படைத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுஇன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இச்சந்தேக நபர் விமானப்படை தளபதிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தான் நாமல் ராஜபக்ஷ என அறிமுகப்படுத்திக்கொண்டாரம். அதன்பின் விமானப்படை உயர் அதிகாரியொருவரின் இடமாற்றத்தை ரத்துச்செய்யுமாறு அச்சுறுத்தும் பாணியில் விமானப்படைத் தளபதிக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நபரின் செல்லிடத் தொலைபேசி சிம் அட்டை மூலம் இந்நபரை கண்டறிந்த பொலிஸார், கடந்த வெள்ளிக்கிழமை அவரை கைதுசெய்து இன்று கொழும்பு மேலதிக நீதவான் பி. ரணசிங்க முன்னிலையில் ஆஜர்படு;த்தினர். அதையடுத்து ஏப்ரல் 18 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விமானப்படைத் தளபதி மேற்படி தொலைபேசி அழைப்பில் சந்தேகம் கொண்டு நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் தொலைபேசி மூலம் இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது தான் விமானப்படைத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவில்லை என நாமல் ராஜபக்ஷ எம்.பி. உறுதிப்படுத்தினார். அதையடுத்து இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு விமானப்படைத் தளபதி அறிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’