“கடந்த எட்டு வருடங்களாக விடுதலைப் புலிகளையும், தமிழரசுக் கட்சியையும் தாறுமாறாக விமர்சித்து வந்த ஆனந்தசங்கரி ஐயா இன்று சுதந்திரமாக வடக்கிலும், கிழக்கிலும் உலவி வீரவசனம் பேசி வருகிறார். மீண்டும் ஒரு இளைஞர் படையை உருவாக்க முனைகிறாரா? என்று எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறு கூறிய மீள்குடியேற்ற பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உப தலை வருமான விநாயகமூர்த்தி முரளிதரன் “அவ்வாறு ஆனந்தசங்கரி இன்று வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திரமாகத் திரிவதற்குக் காரணம் இன்றைய சமாதானமே. அதனை இன்றைய அரசாங்கமே ஏற்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது” என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சாகாம வீதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வேட்பாளர் ராஜு பாஸ்கரனின் தேரதல் அலுவலகத்தைத் திறந்து வைத்து ஆதரவாளர்கள் மத்தியில் பிரதியமைச்சர் வி. முரளிதரன் நீண்ட உரையாற்றினார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ். நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சரின் செயலாளர் பொன் ரவீந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சீ. செல்வராசா, காரைதீவு ஐ. ம. சு. மு. முதன்மை வேட்பாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு பிரதாயமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- “நானும் கடந்த 30 வருட காலமாக உலகில் தலைசிறந்த அணியில் அங்கம் வகித்து ஆயுதம் தூக்கிப் போராடியவன்தான். மிகவும் விசுவாசமாக தாய் மண்ணிற்காக அனைத்தையும் துறந்து தீவிரமாகப் போராடினேன்.
தலைமைக்கும் இயக்கத்திற்கும் விசுவாசமாக பல்வேறு போர்க்களத்தில் தலைமை தாங்கி நடாத்தினேன். ஆனால், இறுதி நேரத்தில் பிரபாகரனது நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு விடிவையோ தீர்வையோ தராது என்று நம்பினேன்.
அவரிடம் சொல்லிப் பார்த்தேன். அவர் விடாப்பிடியாக அடம் பிடித்தார். நடந்ததை அறிவீர்கள். அப்போது அவரை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. விலகினேன். அன்று பலர் என்னைத் துரோகி என்றனர். ஆனால், இறுதி நேரத்தில் நான் எடுத்த தீர்க்க தரிசனமான முடிவால் சமார் 20 ஆயிரம் கிழக்குப் புலிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் இன்றும் என்னைத் தெய்வமாக வணங்குகின்றனர். அந்த யுத்தத்தில் எனது ஒரே அண்ணரை இழந்தேன்.
சும்மா வெறுமனே அரசுக்கு ஏசுவதால் ஆவது ஒன்றுமில்லை. உண்மை நிலையை அறியாது தமிழர் கூட்டமைப்பினர் புலிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு நாடகமிட்டனர். அவர்களால் அக்காலகட்ட த்தில் கூட வட கிழக்குப் பகுதிகளுக்கு வர முடியாமல் போய்விட்டதை மறந்திருக்க முடியாது. ஆனால் இன்றைய சூழலில் அவர்கள் வருகிறார்கள். பேசுகிறார்கள். இக்கூட்டமைப்பினரால் இதுவரை தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன? இது பற்றி தமிழ் புத்திஜீவிகள் நன்கு சிந்திக்க வேண்டும்.
அரசு போரில் வெற்றிபெற்று சமாதான சூழ்நிலையைக் கொண்டு வந்ததும் இன்று தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழ்கிறார்கள்.
வெளிநாட்டில் பல்லாண்டுகாலம் வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இன்று இலங்கைக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத் தில் இராணுவம் வைத்திருந்த பல இடங்களை தமிழ் மக்களிடம் வழங்கி வருகிறது. மக்கள் அண்மைய வெள்ளத்தில் தத்தளித்தனர். இந்தக் கூட்டமைப்பில் யார் அவர்களுக்கு உதவினார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை. நாம் மட்டும் வாழ்ந்தால் சரி என்று நினைப்பவர்கள் அவர்கள். தமிழ் மண்ணைக் காப்பாற்றுவோம், மக்களைக் காப்பாற்றுவோம் என மார்தட்டிப் பேசுவார்கள்.
இன்று மீண்டும் வந்து தமிழ் மண்ணைக் கைப்பற்ற வேண்டும். அது எம்மால்தான் முடியும். தமிழ்த்தேசியம் வாழ வேண்டும் என்றெல்லாம் பேசுவார்கள். நாம் எதற்கும் சோரம் போக மாட்டோம் என்பார் கள். சங்கரி ஐயாவுக்கு இவையெல்லாம் நன்கு தெரியும். இருந்தும் மீண்டும் ஒருதரம் பரீட்சித்துப் பார்க்க களமிறங்கி யுள்ளார். ஆலையடிவேம்பு மக்கள் கடந்தகாலங்களில் பட்ட இன்னல்களை நாமறிவோம். அதை ஈடுசெய்யவே ஐ. ம. சு. முன்னணி தேர்தலில் குதித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’