வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 மார்ச், 2011

வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்குமுறை ஆட்சியை முழுநாடும் விரைவில் அனுபவிக்க நேரிடும்: சோமவன்ச

ரசாங்கத்தின் வியூகங்கள் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. தற்போது வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்கு முறையிலான ஆட்சியை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கான முன்னேற்பாடே உள்ளூராட்சி சபைகளை ள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனமாகும். இதற்கு ஆளுனராக நியமிக்கப்படுபவர் 100 வீதம் இராணுவ அதிகாரியாகவோ அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது சர்வாதிகார கொள்கையுடையவராகவோ இருப்பார் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கத்தின் காய் நகத்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. கடந்த காலங்களில் கூறிய எதிர்வு கூறல்கள் பொய்யாகவில்லை. சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனம் தொடர்பாக ஜே.வி.பி ஏற்கனவே பொதுமக்களை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஜனநாயக ஆட்சி முறைமை ஒன்றிற்கான மூலக்கூறுகளை முடக்கும் செயலிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
அரசாங்கம் செல்லும் வழி மிக தெளிவாகவே உள்ளது. அதன் ஆபத்துக்கள் குறித்து மக்கள் விழிப்படையவில்லை. என்பதே தற்போதைய உண்மையான நிலையாகும்.
18வது தடவையாக அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களானது ஜனநாயக ஆட்சியில் முடிவை சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக 17வது திருத்தம் அரசியலமைப்பில் அப்புறப்படுத்தப்பட்டமையானது ஜனநாயக செயற்பாடுகளுக்கு விழுந்த முதல் அடியாகும்.
எனவே தற்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபன முறையானது தேர்தல்களின் ஊடாக வெளிப்படும் மக்கள் ஆணையை இல்லாதொழிக்கும் நிலமையாகும். இன்று கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கொலன்னாவ மற்றும் முல்லேரியா போன்ற உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்பட்ட நிலமை நாட்டின் ஏனைய சபைகளுக்கும் ஏற்படும்.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தினை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நகரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் அல்லது ஆளுனராக நியமிக்கப்படுபவர் இராணுவஅதிகாரியாகவே காணப்படுவார்.
என்பது உறுதியான விடயமாகும். இன்று வடக்கில் உள்ள சூழலே தெற்கிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படப்போகின்றது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’