அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்த முறை ஆண்டிப்பட்டியில் போட்டியிட மாட்டார் என்று அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கம் அல்லது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அவர் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான தொகுதி என்பதை பாதுகாப்பான தொகுதி எது என்பதில் இப்போது தலைவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முதல்வர் கருணாநிதி சென்னையில் போட்டியிட மாட்டார், திருவாரூரில் நிற்கப் போகிறார், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பலவிதமாக தகவல்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிததா குறித்தும் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. அவர் சமீப காலமாக ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வருகிறார். ஆனால் இந்த முறை அங்கு போட்டியிட அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. மாறாக, கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் அல்லது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அல்லது இரு தொகுதிகளிலும் கூட அவர் போட்டியிடலாமாம்.
கவுண்டம்பாளையம் அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள தொகுதி. மாநிலத்தின் பிற பகுதிகளில் எந்த அலை அடித்தாலும் கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுக அலை பலமாகவே வீசும். கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். லோக்சபா தேர்தலிலும் கூட இங்கு அதிமுக ஆதரவு அலைதான் பலமாக வீசியது.
எனவே கோவை பக்கம் ஜெயலலிதா போட்டியிடுவது பாதுகாப்பானதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதேசமயம், அம்மாவின் மனதில், ஸ்ரீரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவினரின் விருப்பம் கோவை பக்கம் இருப்பதாலும், அம்மாவின் மனது ஸ்ரீரங்கம் இருப்பதாலும், இந்த முறை ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இருப்பினும் ஜெயலலிதா என்ன முடிவை இறுதியாக எடுப்பார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’