வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 மார்ச், 2011

இங்கிலாந்தை வீழ்த்தியது பங்களாதேஷ்

ங்கிலாந்து அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

பங்களாதேஷ் சிட்டகொங் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 225 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜொனதன் ட்ரொட் 67 ஓட்டங்களையும் இயொய்ன் மோர்கன் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் நயீம் இஸ்லாம் அப்துர் ரஸாக், ஷகீப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்அணி 49 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் தமீம் இக்பால் 38 ஓட்டங்களையும் இம்ருல் காயிஸ் 68 ஓட்டங்களையும் பெற்றனர். அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷ் அணி 40 ஆவது ஓவரில் 8 ஆவது விக்கெட்டை 169 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இழந்தது. எனினும் முஹ்மதுல்லாவும் 10 ஆவது வரிசை வீரர் சபியுல் இஸ்லாமும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றனர்.
சபியுல் இஸ்லாம் 24 பந்துகளில் ஒரு சிக்ஸர் 4 பௌண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’