வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 மார்ச், 2011

லிபிய வான் பரப்பில் பிரெஞ்சு இராணுவ விமானங்கள்

லிபியாவின் வான் பறப்பில் பிரான்ஸ் நாட்டின் விமானப்படை ஜெட் விமானங்கள் பறந்து வருகின்றன. லிபியாவில் ஐநா. பாதுகாப்புச்சபை தீர்மானத்திற்கிணங்க விமானப் பறப்புத் தடை வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அதை பிரெஞ்சு விமானங்கள் கண்காணித்து வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸி தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெங்காஸி நகர் மீது கேணல்கடாபியின் படைகள் தாக்குதல் நடத்துவதை பிரெஞ்சு விமானங்கள் தடுத்து வருவதாக கூறிய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி, "எந்தவொரு தாக்குதலையும் எமது விமானப்படை எதிர்கும்" என்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மேற்குலக மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் லிபிய நிலைமை குறித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் பிரெஞ்சு விமானங்கள் லிபியாவில் பறக்க ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸின் சென் டீஸியர் விமானப்படைத் தளத்திலிருந்து இவ்விமானங்கள் புறப்பட்டன.
ஐநா. பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் பின்னர் லிபியா மீது மேற்கு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட நேரடி தலையீட்டு நடவடிக்கை இதுவாகும்.
இவ்விமானப் பறப்புகளின் முதல் மணித்தியாலங்களில் பிரச்சினைகள் எதுவும் எதிர்நோக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாரிஸ் மாநாட்டில் கலந்துகொண்ட நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே, செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரித்தானிய, பிரெஞ்சு, கனேடிய விமானங்கள் லிபியா மீதான முதல் தாக்குதல்களை ஆரம்பிக்கும் என தான் நம்புவதாக கூறினார்.
இத்தாக்குதல் இன்று சனிக்கிழமை இடம்பெறுமா எனக் கேட்டபோது, "அதற்கான சாத்தியம் உள்ளது" என அவர் பதிலளித்தார்.
லிபியாவில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும், தேவையானால் தாக்குதல்களை நடத்துவதற்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்றுவெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’