வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 மார்ச், 2011

பசியை முடிச்சுப்போட்டு காற்றையும் குடித்துக்கொண்டு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது துரதிஷ்டவசமானது : ரணில்

க்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் மூன்று வேளையும் சாப்பிட்டு கடலையை அவித்து கோப்பி குடித்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை மக்கள் கண்டுகளித்தனர். இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் பசியை முடிச்சு போட்டுக்கொண்டு காற்றை குடித்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்கும் துரதிஷ்டவசமா நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில்விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலக கிண்ண கிரிக்கெட் போர்வையில் தேர்தலை அபகரித்து கொள்வதே அரசாங்கத்தின் தேவையாக இருக்கின்றது. அதனால் தான் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததன் பின்னர் போட்டியை பணத்திற்கு விற்றுவிட்டதாக என்று அரசாங்கத்தின் தொலைகாட்சி குற்றஞ்சாட்டுகின்றது. கிரிக்கெட் வீரர்களையும் ஊழல் மோசடிக்குள் சிக்கவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் கூறினார்.
புத்தளம் மற்றும் நாத்தாண்டியா ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’