வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மார்ச், 2011

நியூஸிலாந்தை வென்றது இலங்கை அணி

ன்று வெள்ளிக்கிழமை நியூஸிலாந்து அணியுடனான உலக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 112 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. குமார் சங்காரவின் அபார துடுப்பாட்டமும் முத்தையா முரளிதரனின் அபார பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.

குழு 'ஏ' இல் இவ்விரு அணிகளினதும் கடைசிப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களைப்பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்கவும் திலகரட்ன தில்ஷானும் தலா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும் அணித்தலைவர் குமார் சங்ககார 111 ஓட்டங்களையும் உபதலைவர் மஹேல ஜயவர்தன 66 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மத்தியூஸ் 35 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி வீரர்களில் இம்மூவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்யை பெறவில்லை. முத்தையா முரளிதரன் 3 பந்துகளில் 7 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 35 ஓவர்களில் 153 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அணித்தலைவர் ரோஸ் டெய்லர் 33 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’