குடிபோதையில் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
நான்கு குழந்தைகளின் தாயான மரியா டொப் எனும் இந்த பெண் மார்டின் டக்ளஸ் (வயது 45) என்பவரின் விதைப்பகுதியை கடித்து காயப்படுத்திதியுள்ளார்.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட மோதலொன்றின்போது, ஏற்பட்ட இச் சம்பவத்தையடுத்து மார்டின் டக்ளஸ் அவசர சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் கடும் வலிக்கு மத்தியில் 999 என்ற அவசர சேவை இலக்கத்துடன் தொடர்புகொண்டு தனது நிலையை தெரிவித்தார். ஆனால், ஆரம்பத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதை தொலைபேசியில் பதிலளித்தவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதிருந்ததாம்.
பின்பு நியூகாஸல் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு மருத்துவர்கள் விரைந்தனர். வைத்தியசாலையில் மார்ட்டின் டக்ளஸுக்கு அவசர சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
அதேவேளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து டக்ளஸின் காதலியான மரியா டொப் கைது செய்யப்பட்டார்.
மரியா டொப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேற்படி சம்பவத்தில் டக்ளஸின் கைகளிலும் காயமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது காயங்கள் மாறும் வரை பல நாட்களை வைத்தியசாலையில் கழித்தார்.
மரியா டொப் மீதான வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’