வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மார்ச், 2011

தற்கொலை செய்த இலங்கை பணிப்பெண்

வூதி அரேபியாவில் கடந்த ஜனவரி மாதம் மரணமான இலங்கை பணிப்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சவூதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த பெண் நாத்தாண்டியாவை சேர்ந்த 26 வயதான திலினி குமாரி என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு வந்த இவர், அரார் பகுதியிலுள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார். இந்த மரணம் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
கறை நீக்கி இரசாயமான குலோறக்ஸ் திரவத்தை மேற்படி பெண் அருந்தியதாக நேற்று திங்கட்கிழமை வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண் எந்தவித பிரச்சினையுமின்றி தனது வேலையை சரிவரச் செய்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்பெண்ணுக்கு சம்பளம் ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டதாகவும்; கொடுக்க வேண்டிய நிலுவைப் பணத்தை கொடுப்பதற்கு வீட்டு உரிமையாளர் இணங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அடுத்த வாரமளவில் இவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’