வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 மார்ச், 2011

இங்கிலாந்து அணிகக்கு அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி

லக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது. இம்முறை உலக கிண்ணப் போட்டிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சிப் பெறுபேறு இதுவாகும்.

குழு' பி' அணிகளுக்கிடையிலான இப்போட்டி பெங்களூர் சின்னச்சாமி அரங்கில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 327 ஓட்டங்களைப் பெற்றது. ஜொனதன் ட்ரொட் 92 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்றார். இயன் பெல் 81 ஓட்டங்களைப் பெற்றார்.
அயர்லாந்து பந்துவீச்சாளர்களில் ஜோன் மூனி 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அயர்லாந்து அணி முதல் பந்துவீச்சிலேயே தனது அணித்தலைவரான வில்லியம் போர்ட்பீல்டை இழந்தது.
இரண்டாவது வரிசை வீரர் போல் ஸ்டேர்லிங், 3 ஆவது வரிசை வீரர் எட் ஜோய்ஸ் ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்றனர். நீல் ஓ பிரையன் 29 ஓட்டங்களுடனும் கெரி வில்ஸன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தபோது அயர்லாந்து அணி 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆனால் பின்னர் வந்த வீரர்கள் போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தினர் கெவின் ஓ பிரையன் ஓட்டங்களைப் பெற்றார். இவர் 50 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்ததன் மூலம் உலக கிண்ணப் போட்டிகளில் வேகமாக சதம் குவித்த வீரர் எனும் சாதனைக்குரியரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸ் குஷாக் 47 ஓட்டங்களைப் பெற்றார்.

328 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி முன்னேறிய அயர்லாந்து அணிக்கு கடைசி 12 பந்துகளில் 12 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன.
49 ஆவது ஓவரின் முதல் பந்தில் மேலும் ஒரு ஓட்டம் பெற்ற நிலையில் கெவின் ஓ பிரையன் ஆட்டமிழந்தார். அவர் 63 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்தார். இவற்றில் 6 சிக்ஸர்கள், 15 பௌண்டரிகள் அடங்கும்.
எனினும் ஜோன் மூனியும் ட்ரென்ட் ஜோன்ஸ்டனும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது அயர்லாந்து அணி.
ஜோன் மூனி 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் ஜோன்ஸ்டன் 4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்களையும் பெற்றனர்.
கெவின் ஓ பிரையன் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’