இலங்கையிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
41 வயதான புன்யசார கெதர என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். மொன்கோமெரி நகரில் கடந்த திங்களன்று இக்கொலை இடம்பெற்றுள்ளது. இதே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 81 வயதான நபர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார். இவ்விரு கொலைகள் தொடர்பாக மொன்ட்கோமரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புன்யசார கெதரவின் கொலை தொடர்பாக அவரின் உறவினரான சிறில் ராஜபக்ஷ கூறுகையில், தான் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, துப்பாக்கி வெடியோசை கேட்டதாக கூறினார்.
'நான் ஓடிச் சென்று பார்த்தேன். அவர் அணிந்திருந்த மேலாடை மூலம் அவரை அடையாளம் கண்டேன். அப்போது அவர் உயிரோடு இருந்தார்' என சிறில் ராஜபக்ஷ கூறினார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபின்னர் கெதர இறந்தார். 'அவருக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை. என்னால் இதை நம்பமுடியவில்லை. அவர் வேலைக்கு தவிர வேறு எங்கும் தனியாக செல்வதில்லை' என சிறில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’