வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

யுத்த அழிவுகளைக் கண்டு அச்சமடைந்தேன்: இயன் பொத்தம்

லங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் முகங்கொடுத்து வரும் துன்பங்கள் மற்றும் அழிவுகளைக் கண்டு தாம் அச்சமடைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஜாம்பவானான சேர் இயன் பொத்தம் தெரிவித்துள்ளார்.

பொத்தம், ஞாயிறன்று யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாகத்தினை மேற்பார்வையிட சென்றிருந்தார்.
இதன்போது, யுத்தத்தில் இளம் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்டதைக் கேள்வியுற்று தாம் வேதனையுற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மாங்குளத்தில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாகத்தினை பார்வையிட அங்கு சென்ற பொத்தம், வெறுமையான நிலங்களையும் , செல் குண்டுகளினால் தகர்க்கப்பட்ட வீடுகளையும், மரங்களின் எரிந்த மேற்பாகங்களையும் கண்டதாகவும் அக் காட்சியை தன்னால் நம்ப முடியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி திட்டமானது முத்தையா முரளிதரனால் முன்னெடுக்கப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
இவ்விஜயத்தின் போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோனும் இயன் பொத்தமுடன் இணைந்து கொண்டிருந்தார்.
இவர்கள் அங்குள்ள சிறுவர்களுடன் நட்புறவு கிரிக்கெட் போட்டியொன்றிலும் விளையாடினர். மேலும் மாங்குளத்திலுள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் செய்திருந்த இவர்கள் உணவுப் பொருட்கள், நுளம்பு வலைகள் மற்றும் சமையல் உபகரணங்களையும் வழங்கினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’