இந்திய மாணவியொருவரை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 24 வயதான தோஷா தாகர் எனும் மாணவி கொலை செய்யப்பட்டு அவரின் சடலம் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் கால்வாயொன்றிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 19 வயதான டானியல் ஸ்டெனி ரெஜினோல்ட் என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தோஷா தாக்கரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் கொலை செய்ததாக ரெஜினோல்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை பர்வூட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தாக்கரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 20 பேர் நீதிமன்றிற்கு சமுகமளித்திருந்தனர்.
"இக்கொலையினால் நாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளோம். இவ்விடயத்தில் இயன்றவரை விரைவாக நீதி கிடைக்க வேண்டும்" என நீதிமன்றத்திற்கு வந்திருந்த தாக்கரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’