தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதன் கொள்கை இலட்சியம் மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் இத் தேர்தலில் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து மேலும் நம்பிக்கையை ஊட்டியுள்ளனர்.
எனவே உள்ளூராட்சி தேர்தலில் எமக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட வடக்குக் கிழக்குப் பகுதியில் வன்னி, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் நகர, பிரதேச சபைகளில் ஆட்சியைப் பெற்றிருக்கின்றோம். ஏனைய சபைகளிலும் கணிசமான அளவு வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் கொள்கை இலட்சியம் மீதும் நம்பிக்கையுள்ள மக்கள் இத்தேர்தலிலும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து மேலும் தம் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
அதற்காக வாக்களித்த மக்களுக்கும் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அரசின் அமைச்சர்களும், அரசின் முகவர்களும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் குழாமும் அதிகாரங்களையும் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தியும், ஆங்காங்கு முகாமிட்டு ஆயுத முனையில் எமது வேட்பாளர்களையும் மக்களையும் அச்சுறுத்தியும் வாக்குகளை அபகரிக்க முயற்சித்த பொழுதும் தமிழ் மக்கள் பெருமளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து மக்களின் வெற்றியை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
தமிழ் மக்களின் இத் தீர்க்கமான தீர்ப்பும் பெற்ற வெற்றியும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபைகளிலும் தேர்தல் நடைபெறும் பொழுதும் நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கையுண்டு. தமிழ் மக்களின் இத் தெளிவான தீர்க்கமான தீர்ப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு ஏற்ற அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். மக்கள் எதிர் நோக்கி நிற்கும் அன்றாடப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’