ஜனாதிபதியின் படம் இருப்பதால் பதாகைகளை பொலிஸார் அகற்ற பயப்படுகிறார்கள். தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
“தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில்லையென அவரே ஏற்றுக்கொள்கிறார். இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளில் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்கின்றன.
எமது நாட்டில் அதிகாரமில்லாத பெயரளவில் பதவி வகிக்கும் ஆணையாளரே பதவி வகிக்கின்றார். இதனால் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை இங்கு எதிர்பார்க்க முடியாது”

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’