லிபியாவிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு இலங்கையின் முக்கிய கரிசனையாகவுள்ளதென இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறான கரிசனையே 1973ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு இட்டுச்சென்றது. எனவே, இந்த தீர்மானத்துக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களையும் பொதுமக்கள் வாழும் இடங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் இணைக்கப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சமாதானமான முறையில் தீர்த்துவைக்கும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிபியாவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள இலங்கை விரைவில் சமாதானம் ஏற்பட வேண்டுமென பெரிதும் விரும்புகின்றதென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’