இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணம், ஹில்டன் ஹோட்டல் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் மூலம் பங்குச் சந்தையில் ஒரே நாளில் 40 லட்சம் டொலர் லாபமீட்டியதாக அமெரிக்க நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த ஹோட்டலை பிளக்ஸ்டோன் குழும நிறுவனம் வாங்கியபோது இது நடந்ததாகவும் அமெரிக்க இந்தியர்கள் இருவர் இதில் சம்பந்தப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
உள்வீட்டு இரகசிய தகவல்களை பெற்று பங்குச்சந்தையில் முறையற்ற விதமாக லாபமீட்டினார் என ராஜ் ராஜரட்ணம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரையாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்களும் நீதிமன்றில் செவிமடுக்கப்பட்டன. இதன் மூலம், இன்டெல் நிறுவன மன்னாள் தலைவர் ராஜீவ் கோயல் எவ்வாறு இரகசிய தவல்களை ராஜ் ராஜரட்ணத்திற்கு வழங்கினார் என்பதை வழக்குத் தொடுநர்கள் வெளிப்படுத்தினர். இவ்வழக்கில் தான் குற்றவாளி என ராஜீவ் கோயல் ஏற்கெனவே ஒப்புககொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’