என் வாழ்க்கையில் எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளது என நம்புகிறேன். இனியும் அப்படித்தான் நடக்கும், என் திருமணம் உள்பட என்கிறார் பிரபு தேவா.
மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்யும் பிரபுதேவா, நடிகை நயன்தாராவை திருமணம் செய்கிறார்.
இதுகுறித்து பிரபுதேவா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "என் சொந்த வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளன என்று நான் நம்புகிறேன். பள்ளியில் படித்த போது எனக்கு நன்றாக படிப்பு வரவில்லை. அதனால் டான்ஸ்மாஸ்டர் ஆனேன். பிறகு நடிகரானேன். இப்போது இயக்குனராகி இருக்கிறேன்.
என் சொந்த வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் தீர்மானித்திருப்பது விதிதான். எனவே விதிப்படி எனக்கு இதுதான் நடக்கும் என்று எழுதி இருந்தால் அது நடந்தே தீரும்.
இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கை நன்றாக போகிறது. என்னை சுற்றி உள்ள மக்களை மகிழ்ச்சி படுத்துவதே என் விருப்பம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.
நயன்தாரா விஷயத்தில், தற்போதைய சூழலில் நான் எந்த பரபரப்பு செய்தியையும் உருவாக்க விரும்பவில்லை. வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே நேரம், இடம் என்று உள்ளது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும்...", என்றார்.
'காதலர் தினம் வருகிறதே, அன்றைக்கு உங்கள் ப்ளான் என்ன?' என்று கேட்டபோது, 'மும்பையில் இந்திப் படத்தின் க்ளைமாக்ஸ் பற்றி டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பேன்!', என்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’