வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

ஊடக சுதந்திரம் முக்கியமானது: ஐ.நா.

டகங்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டியது முக்கியமென்பதுடன், ஊடகவியலாளர்கள் பீதியின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் நேற்று தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசக்கி இதனைக் கூறினார்.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்று மலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளது. பொலிஸார் அங்கு சென்றிருந்தவேளையில் அலுவலகம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பிரதி பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான குழுவொன்றை பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’