தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும் (PLOTE) பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தமிழ்க் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெறவுள்ளன.Read: In English
வட, கிழக்கு மாகாணங்கள் தொடர்பான பல விடயங்கள் இப் பேச்சுவார்த்தையில் ஆராயப்படவுள்ளன. அதேசமயம் இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கின் மீள்குடியேற்றம் தமது காணிகளை இழந்த பொதுமக்களின் பிரச்சினைகள், யாழ்ப்பாண மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினை போன்ற விடயங்கள் அரசாங்கத்துடனான அடுத்த சந்திப்பில் ஆராயப்படுமென வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’