வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 பிப்ரவரி, 2011

கருணாநிதி அத்துமீறி மீன்பிடிக்கையில் இந்தியாவிடம் கையேந்துகிறது இலங்கை

லங்கை கடலில் கருணாநிதி அத்துமீறி மீன் பிடிக்கையில் இந்தியாவிடம் தேங்காய்க்கு கையேந்தி அரசாங்கம் காத்திருக்கின்றது. தேர்தலின் பின்னர் அனைத்து துறைகளிலும் விலை அதிகரிப்பு இடம் பெறும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொது மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். சட்டவிரோத சுவரொட்டிகளைஅகற்ற பொலிஸாருக்கு நிதி வழங்கப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் இடம் பெற்ற மயிலாட்டத்திற்கு ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உட்பட போக்குவரத்து. மின்சாரம், பரீட்சைகள் கட்டணம். பதிவுக் கட்டணம் என பலவற்றிலும் அரசாங்கம் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எரிபொருள் நிலையங்கள் 5 ரூபாவால் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வீண் பிரச்சினைகளையே தோற்றுவித்து வருகின்றது.
இந்தியா இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்களை பிடித்துச் செல்கின்றது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, கடல் வளத்தை பாதுகாக்கவோ செயற்படாது இந்தியாவிலிருந்து தேங்காய் கொள்வனவு செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இதனை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் மறுத்து வருகின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’