நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின் போதும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைந்து செல்கின்றது. தேர்தல்களில் முன்வைப்பதற்கும் பேசுவதற்கும் எதிர்க்கட்சிகளிடம் தொனிப்பொருள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் ஆளும் கட்சிக்கு சிறந்த மக்கள் ஆதரவு உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்
.ஆனால் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் வாக்களித்த வீதத்தில் பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்தளவிலான வாக்களிப்பு வீதமே இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது இந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி நிச்சயமாகும். மக்கள் ஆளும் கட்சியின் மீது பாரிய வகையில் நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
நாட்டில் நடைபெறுகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சீர்குலைந்து செல்கின்றது. ஒரு தேர்தலில் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். மற்றுமொரு தேர்தலில் பிரிந்து செயற்படுகின்றனர். பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தொனிப்பொருள் கூட இல்லாத நிலைமையே உள்ளது.
எவ்வாறெனினும் இந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். காரணம் அண்மையில் தான் மக்கள் இரண்டு பெரிய தேர்தல்களை சந்தித்தனர். எனவே மக்களிடம் தேர்தல் களைப்பு இருக்கலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’