வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 பிப்ரவரி, 2011

வேட்புமனுக்கள் நிராகரிப்பினால் புதிய பாடத்தை கற்றுக்கொண்டோம்

க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் மட்டுமன்றி எதிர்க்கட்சிகளின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனினும் முன்னணியின் வேட்பு மனுக்கள் கூடுதலாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனூடாக புதிய பாடத்தினை கற்றுக்கொண்டோம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மகாவலி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மட்டுமே உரிய விடயமல்ல. அது பொதுவான விடயமாகும். சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவிருக்கின்றோம்.
நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சிலவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.முன்னணியின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையினால் அரசாங்கத்திற்கு கிராம மட்டத்தில் செல்வாக்கு குறையவில்லை என்பதுடன் கிராமங்களுக்கு செல்வதற்கு எங்களுடைய வேட்பாளர்கள் அஞ்சவும் இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியிடம் கிராம மக்களை வெற்றெடுக்கும் வேலைத்திட்டம் இல்லை, மக்களை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் ஆட்டம் காண்பதற்கோ அதில் கீறல் விழுவதற்கோ மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் கருத்து இந்த ஊடகவியாலாளர் மாநாட்டில் முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
தமிழ் மொழிப்பெயர்ப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையினால் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவைத்தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தம் ஏற்படுத்தாது என்பதுடன் மக்களுக்கு முக்கியமானதாகும். என்பதனால் வன்முறைகள் இன்றி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நாம் எங்களுடைய வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’