வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வடக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும்: ஐ.தே.க கோரிக்கை

டக்கு வாழ் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் தேர்தல் ஆணையாளரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தேர்தல் ஆணையாளரிடம் இதனைத் தெரிவித்தார். இதன்போது வடக்கு ஐ.தே.க வேட்பாளர்கள் யாழ். தீவுப்பகுதிகளிலும் முகாம்களிலும் சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இராணுவம் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
முகாம் மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்ய அரசு தேர்தல் வாக்குச்சாவடிகளை தூரப்பிரதேசங்களில் வைத்திருப்பதாகவும் இதனால் 70 கிலோ மீட்டர் துரம் சென்று வாக்களிக்கவேண்டும். ஒரு பஸ் மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழர்களின் வாக்குகளைக் குறைப்பதற்கு அரசு முயற்சி செய்கிறது என ஜயலத் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’